மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 9 ஜூன், 2020

"வெப்பம்"




வெப்பம் சிறுக(வி)தை

கதவு,ஜன்னல்,கட்டில்,மெத்தை,
கண்ணாடி,சுவர் என தொட்ட
இடமெல்லாம் சுட்டது வெப்பம்
மீதமின்றி மின்விசிறி கூட்டி

அரை மனதாய் அறைக்கதவு சாத்தி
படுக்கறையில் பக்கத்தில் கணவன்
கை வைத்ததும் கணவன் மார்பில்
கண்அயர்ந்து கனவில் நுழைந்தேன்

நிலம் தேடும் நேர் உச்சி வெயில்
வெயில் தோற்க்கும் விரிந்த மரங்கள்
விரிந்தமர நிழல்களுக்கு உள்ளே
மனதைக் கவரும் மழைநீர்ச் சுணை

என்னுருவை எனக்கே காட்டும்
தேனையொத்த தெளிந்தநீர் கண்ணாடி
ஆடை களைத்து பாதம் பதித்தேன்
பாதரசம்போல் பகட்டாய் மின்னி

மேனியெங்கும் குளிர் மின்னல் பாய
மன்டியிட்டு மார்பு நனைத்தேன்
இலவம் பஞ்சுபோல் இதயக்கூட்டை
இலேசாய் தூக்கி என்னுடல் மிதந்தன

மொட்டு விரிந்த ஒற்றைத் தாமரை
சற்றுத் தொலைவில் சாய்ந்த நிலையில்
கொட்டிப் பரவிய கூலாங் கல்லில்
பட்டும் படாமல் என்கால் தரையில்

தொட்டும் தொடாநீர் தாமரை இலையில்
எட்டிப் பறிக்க இருகை நீட்டி
ஈரத்தில் அமிழா இறகது போலே
எத்தனித்த என் தோள் தட்டி

ஒட்டு மொத்த உலக இன்பம்
உனக்குச் சொந்தம், உனக்கே சொந்தம்
என என்காதருகே யாரோ சொல்ல
கனவு களைந்ததன் காரனம் யார்..?

கரண்டு போச்சு காத்துவர கதவைதிற
சொன்னது கணவர் சோகம் ததும்ப
காசில்லாது வந்த கனவும்
கரண்டில்லாது களைந்து போச்சே

வெப்பம் தீர வேண்டினேன் இறைவனை
=============================
இவன்:பிறைத்தமிழன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக