மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 29 மே, 2016




காலச்சக்கரத்தை கணனி மயமாக்கி
கலாச்சாரத்தை காலில் மிதித்தபடி
அனாச்சாரத்தை தேடி 
அலைவதுதான் சுதந்திரமா ?
இல்லவே இல்லை  பெண்களிடம் 
அறம் மிளிரவேண்டும்   அதுவே 
ஒட்டுமொத்த சமூகத்தின்உண்மையான 
வாழ்கை முறையாகும்.
−−−−−−−−−−−−−−−−−−−
"தீன் குலப்பெண்"
 −−−−−−−−−−−−
கனவனின் கண்களிலே
நிறைந்து வாழுவாள் , பிறர்
கண்களுக்கு என்றைக்குமே
மறைந்து வாழுவாள் !
கடல்கிழித்து கதிரவன் 
உதிக்கும் முன்   தன்
உடல் குளித்து" ஒழுவெடுத்து
சுபுஹு தொழுவாள் !
மடல் தாழை கரங்களிலே
மறையை யேந்துவாள் , தன்
மனம் வாக்கும் நிறைந்திருக்க 
ஏக இறையை வேண்டுவாள் 
அவளே  "தீன் குலப்பெண்"
(முஸ்லிம் பெண்)
======================
இவன்: >> பிறைத்தமிழன்...

வெள்ளி, 15 ஜனவரி, 2016

உழவர் திருநாள்

  "உழவர்  திருநாள்" 
    நாத்துப்பாவ    நல்ல   விதை இல்லே
    நமத்து போன  நெல்லு விக்க  நாதியில்லே
     மூனுபோகம்   விளைச்சலுக்கு  கனவு கண்டு 
    ஆமைவேக  அறுவடைக்கு   காத்திருந்தா
     அசுரவேக வெள்ளம் வந்து  அழிஞ்சிருச்சே
   உசுர    கொடுத்து   உழைச்ச தெல்லாம் 
ஒன்னில்லாமே   மடிஞ்சிருச்சே
   ஏர் பிடித்த  எங்களுக்கு  
என்ன    மிச்சம் ?   காச்சுப்போன  
கை யை  தானே சாட்சி வச்சோம்
 ஊரு வாழ உழவு செஞ்ச   எங்களுக்கு    
இப்ப ஏறு  தழுவ   ஏத்த  காலம்   வந்துருச்சா  ?
இல்லை  வீரத்துக்கு  வேலிகட்டி வச்சுருக்கா ?
ரத்தத்திலே    உள்ள  சூடு கொறஞ்சிருசா ?
தமிழன்  சேத்துவச்ச  
பெருமைகளும்  செதஞ்சிருச்சா?
விடிஞ்சு எந்திரிச்சு   
வேட்டி சேலை    கட்டிக்கிட்டு 
   செங்கரும்பு  மஞ்சளையும் ,
சேத்து கட்டி,  சீருவச்சு ,
    புதுப்பானை  பச்சஅரிசி 
போட்டு  நல்ல   பொங்க  வச்சு ,
    ஊர் உறவு   ஒன்னுசேந்து   
கூடி  குலவை   வச்சு  ,
    பேருக்கொரு  நாளை  மட்டும் 
பெருமையோட  கொண்டாடி
    காணல்    நீரைபோல      
கஷ்டங்களை    தூராக்கி
    கண்ணுக்குள்   நீர்பெருக்கி  
கடுஞ்சுமைகளை  இறக்கிவச்சு ,
   எலிக்கறி   தின்ன தெல்லாம்   
எப்படியோ  மறந்து  போச்சு , இனி      
   கலப்பையில்  தொங்குரத   
கட்டாயம் விட்டுருவோம் 
      உழவர் திருநாளை    
உண்மையாய்   கொண்டாடும்
         உலகத்  தமிழரையே    
உளமாற வாழ்திடுவோம்..!!
       >>> இவன்; பிறைத்தமிழன்..

வியாழன், 31 டிசம்பர், 2015

"புத்தாண்டு"

new year 2016 க்கான பட முடிவு
தினசரி கிழித்ததனால் தினசரியும் தீர்ந்தது
இன்னொரு வருடத்தின் இனிய முகவரியாய்
                                                    ஜனவரியும் பிறந்தது
இயற்கையும் இயற்றலும் தன்  எல்லையை மீறாது
இயங்கும்  நாள் வரை எவர்க்கும்
                                                       தொல்லையே வாராது
புதிதாய் கட்டமைக்க   பூகோளம் தெரியாமல்
எளிதாய் இனிமைபெற   இயற்கை சிதைக்காமல்

மதத்தின் பெயராலே மற்றோரை வதைக்காமல்
மனித வக்கிரத்தை மண்தோண்டி புதைப்போமே

பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் பிரியத்தை பங்கிட்டு
பிறக்கின்ற புத்தாண்டில் பிறைத்தமிழன் வாழ்த்தோடு

பிரித்தாளும் சக்திகளின் பிடரியை முறித்திடுவோம்
எகத்தாள குரல்வளையை எண்ணி அறுத்தெறிவோம்

இந்திய ஒருமைப்பாட்டை என்றும் காத்திடுவோம்
இன்பத் தமிழினை ஏற்றம் பெறச்செய்திடுவோம்
==================================================
                                >>>;  இவன் பிறைத்தமிழன் .

வெள்ளி, 11 டிசம்பர், 2015

" இயற்கை", சீற்றம்

                                                               
இயற்கையும் இயற்றலும் எல்லை கடப்பது
========================================
மண் தோண்டி   கல் வெட்டி
மலை போல   மாடி பல கட்டி
               சென்னை  நகரை  சிங்காரப்படுத்தி
               சீராய்  வாழ்தோம்   சில்லறை  ஈட்டி
 ஆறுதோரும்  நீறு   கேட்டோம்
அன்ன வயல்களை   கூறு போட்டோம்
                ஆறு குளமும்   அழிஞ்சு போச்சு
                காடு கழனியும்   காணாது போச்சு
மண் உழுதவன்   மனம் குளிர
தேடி வந்தது   தென்மேற்குப்  பருவம்
                மாடியில்  இருக்கும்  மமதையினாலே
                கூடி நாமும் கொல்லென்று சிரித்தோம்
சீறிப் பாய்ந்த     செம்பரம் பாக்கம்
வாரித்தள்ளி  வங்கக்கடல்  சேர்க்க
               சீரழிந்த தே  சென்னை  நகரம்
               மிரண்டு போகாதோர்  மிச்சமுண்டோ
 பேரிடர் தன்னை  பெரிதாய்  எண்ணி
பேராசை தன்னை  பின்னுக்குத் தள்ளி
               இயற்கைதனை  சிதைக்க மாட்டோம்
                என்றே   இணைந்து சபதம்  செய்வோம்
நாறிப் போன நரபிணம் தின்ன
நாயும் நரியும் வருவது போலே
                மாறி மாறி   மண்ணை ஆள
                கூடி வருமே கொள்ளைக் கூட்டம்
காறித் துப்ப  காத்து  இருப்போம்
போலி வாக்கை  புறந்தள்ளி  பார்ப்போம்
நமக்கு நாமே  துணையாய்  இருந்து   நல்ல
                "மனித  நேயத்தை" உயிராய் காப்போம்.
=======================================
                     >>>இவன் :பிறைத்தமிழன் .

புதன், 5 ஆகஸ்ட், 2015

"புகையிலை"

        

  
      "புகையிலை"
 =======================
    இடதுகை  ரேகை
    என்றுதான் அழியுமோ ?
    புகையிலை இல்லாமல்
    பொழுதுதான் விடியுமோ ?

   ஏய்; ஆயுள் ரேகையை ,
   ஏய்: அதிர்ஷ்ட ரேகையே ,
   எந்த பலனுமின்றி   என்
   இடது கையில்  ஏன் இருக்கிறாய் ?

   உன்னை  அழிக்காமல் விடமாட்டேன் !

   தூள் புகையிலையும் ,
   துளி அளவு  சுண்ணாம்பும் ,
   துப்புக்கெட்ட  கைனி  மற்றும்
   கட்டைவிரல்  துணையோடு
              ஏய்   கைரேகைய
   உன்னை   அழிக்காமல்  விடமாட்டேன் !

   என்று   சவால்   விட்டபடி "பாமரன்"
   சாதனை  தான்  புரிவானா ?அல்லது
   அவன்  சாவுக்கு   பிறைத்தமிழன்
   இரங்கல் தான்  தெறிவிப்தெறிவிப்பேனா ???
================================
                >>>இவன்: பிறைத்தமிழன்:<<<


புதன், 29 ஜூலை, 2015


கனவுகளின் நாயகன்
================
அணுவை  மெருகூட்டி,
அக்கினி  சிறகு பூட்டி!
அகிலத்தை  அதிர வைக்க,
விண்வெளி  தேரோட்டிய,
விந்தை  மனிதரே!

படகோட்டி மகனாக
பாரினில் நீ பிறந்து,
உச்ச பதவிகளை அடைந்தாலும்
உத்தமனாய் தான்  வாழ்ந்து
பாரதத்தின் தலை நிமிர்த்த
பாருலகம்   வியக்குகின்ற
உண்ணத  கனவுதனை
உள்ளமெல்லாம்  விதைத்தவரே !

விண்ணை  நீ  அடைந்தாலும் ,
மண்ணை  உயிர்ப்பிக்கும்
மழையாய்  பிறப்பாயோ ?  எனும்
இரங்கல்  கவிதையினை  எங்கள்
கரங்கள்  வடித்தாலும் ,
இதயம்  வலிக்கிறதே கண்ணீரை,
இமைகள் வடிக்கிறதே"!!!!!!!!!!!!
===========================
>>>இவன்: பிறைத்தமிழன்;<<<



செவ்வாய், 7 ஜூலை, 2015

வாழ்த்து

 "இதயம் திறந்து"
  ============================
           இறைவனுடைய           சாந்தியும்,சமாதானமும் 
     எங்கெங்கும் நிறைந்தபடி !
     கண்ணியமிக்க  இரவது
     காண கிடைக்கின்ற,
     புண்ணியமிகு ரமளானின்
     பூரிப்பில் திளைத்தபடி !
     உழைக்கும் கைகளை,
     உயர்த்தி பிடித்தபடி !
     ஈகை திருநாளில் ,
    இதயம் திறந்தபடி!
    ஒருகோடி உவகைகள் 
     உள்ளத்தில் நிறைத்தபடி !
    ஈருலக ரட்சகனாம் ,
   எண்ணுடய இறைவனை
   இறைஞ்சி  கேட்டபடி !
இகத்தோர் யாவரையும்
பிறைத்தமிழன் வாழ்த்துகிறேன்
  பேதமைகள் அற்றபடி !!!!!!!!!